September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.5 சதம் சாத்தியமே: ஆர்பிஐ எச்சரிக்கை

மும்பை, செப்.11

நடப்பு நிதியாண்டில் 9.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவது என்பது சாத்தியமான நடவடிக்கையே என ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

நடப்பு 2021-22ம் நிதியாண்டில் 9.5 சத பொருளாதார வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை எட்டுவது என்பது சாத்தியமானதே. பணவீக்கத்தைப் பொருத்தவரையில் அதனை கட்டுக்குள் வைக்க ஆர்பிஐ பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் பயனாக, பணவீக்கம் படிப்படியாக 4 சதமாக சரியும். இருசக்கர வாகனம்-கார் விற்பனை, ஜிஎஸ்டி இ-வே பில், மின் நுகர்வு, டிராக்டர் விற்பனை உள்ளிட்டவை பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகத்தைக் கோடிட்டு காட்டும் முக்கிய அடிப்படை அம்சங்களாக உள்ளன என்றார் அவர்.

Spread the love