August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நடப்பு மே மாதத்தில் வாகன விற்பனை 80 சதம் வரை சரியலாம்: நிபுணர்கள் கருத்து

புது தில்லி, மே 10

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கோவிட் தொற்று பரவல் காரணமாக, நாடு முழுதும் பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, வாகன விற்பனை கிட்டத்தட்ட, பூஜ்ஜியத்துக்கு வந்தது.

தற்போது நாட்டில் இரண்டாவது அலை காரணமாக, பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, நடப்பு மே மாதத்தில், வாகன விற்பனை, 80 சதம் அளவுக்கு சரிவை காணும் என, சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டை போல இல்லாமல் இம்முறை, கோவிட் தொற்றின் தீவிரத்தை பொறுத்து, மாநிலங்கள் ஊரடங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தில்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என, பல மாநிலங்கள் முழு ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன. இதன் காரணமாக, 75 சத வாகன விற்பனை நிலையங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட, 20 ஆயிரம் முதல், 26 ஆயிரத்து, 500 ஷோரூம்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.இதனால் சில்லரை விற்பனை வருவாயை பொறுத்தவரை, ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Spread the love