புது தில்லி, மார்ச் 8
கடந்த ஆண்டுகளைப் போல நடப்பு 2021-22 காரீஃப் சந்தைப் பருவத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணிகள் சுமூகமாக நடைபெற்று வருகின்றன.
சண்டிகர், குஜராத், அசாம், ஹரியானா, ஹிமாசலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், தெலங்கானா, ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, மகாராஷ்ட்ரா, புதுச்சேரி, சத்தீஷ்கர், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடப்பு 2021-22 காரீஃப் சந்தைப் பருவத்தில் 6.3.2022 வரை 725.93 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதார விலையாக 102.29 லட்சம் விவசாயிகளுக்கு 1,42,282.68 கோடி ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து 21,57,739 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,24,576 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக 4,229.17 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.