August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நபார்டு வங்கியின் நிதியுதவி பயிற்சி

நாமக்கல், ஆக. 3

நாமக்கல், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 22 முதல் 24 வரை மூன்று நாட்கள் சிறப்பு பயிற்சியாக “நாமக்கல் மாவட்டத்திற்கேற்ற சிறுதானிய சாகுபடி முறைகள் மற்றும் மதிப்பூட்டும் தொழில்நுட்பம்” என்ற தலைப்பில் நபார்டு வங்கியின் நிதயுதவிடன் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் சிறுதானியத்தின் முக்கியத்துவம், புதிய இரகங்கள், மானாவாரியில் தினை, சாமை, குதிரைவாலி, வரகு, பணிவரகு, கேழ்வரகு சாகுபடி முறைகள், சிறுதானிய பயிர்களை தாக்கும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள், சிறுதானியங்களில் மதிப்பூட்டும் முறைகள், சிறுதானிய திண்பண்டங்கள் தயாரித்தல் மற்றும் சத்துமாவு உற்பத்தி பற்றிய செயல்முறை விளக்கம், விற்பனை வாய்ப்புகள் மற்றும் தர்மபுரி மாவட்டம் சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை பார்வையிட்டு கலந்துரையாடல் ஆகியவை வழங்கப்பட உள்ளது.

ஆகவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலச்சிப்பாளையம், மல்லசமுத்திரம், எருமப்பட்டி, கொல்லிமலை மற்றும் பரமத்தி வட்டாரத்தைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் சிறுதானிய சாகுபடி மற்றும் மதிப்பூட்டுதலில் ஆர்வம் உள்ள பண்ணை மகளிர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். எனவே ஆர்வமுள்ள விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தை 04286 – 266345, 266650 தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு அடிப்படையில் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்படும்.

Spread the love