August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நரிக்குடி வட்டாரத்தில் ரிலையன்ஸ் பவுண்டேஷன் சார்பில் நிலக்கடலை டிஜிட்டல் பண்ணை பள்ளி

விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி வட்டாரத்தில் மினாக்குளம் கிராமத்தில் நிலக்கடலை சாகுபடிக்கான டிஜிட்டல் பண்ணை பள்ளி திட்ட மேலாளர் கிருபா தலைமையில் நடைபெற்றது. அவர் தனது உரையில் பண்ணை பள்ளியின் முக்கியத்துவம் பற்றியும் இந்த மாவட்டத்தில், முக்கிய பயிர்களான நெல், நிலக்கடலையின் சாகுபடிக்கான தொழில் நுட்பங்களை

அந்த அந்த பருவத்திற்கேற்ற செய்திகளை, குறுந்தகவல்யாகவும், வாட்சாப் தகவலாகவும் முன்னோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். தொழில்நுட்ப உரையாற்றிய தொழில்நுட்ப வல்லுநர் சந்திர சேகரன் பேசுகையில், வருகிற ஆடி பட்டத்தில் மானாவாரி நிலக்கடலை சாகுபடி செய்யும் போது தரமான நிலக்கடலை ரகங்களை தேர்வு செய்யவேண்டும். தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின்கீழ் எண்ணெய் வித்து சாகுபடிக்கான மானிய விபரங்கள், குறித்து விளக்கினார். ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பு குறித்து விரிவாக எடுத்து கூறியதுடன் நிலக்கடலையில் அதிக மகசூல் பெற செய்ய வேண்டிய பத்து முக்கிய தொழில்நுட்பங்களை எடுத்து கூறினார். விவசாயிகள் முத்தையா, முத்து குமார், குமார வேல் தங்களுடைய சாகுபடி நுணுக்கங்களை தெரிவித்தனர். மண்மாதிரி எடுக்காத விவசாயிகள் விரைவாக மண்மாதிரி எடுத்து கொடுக்க வேண்டுமாய் கேட்டு கொள்ளப்பட்டது, முடிவில் ரிலையன்ஸ் பவுண்டேசன் களப்பணியாளர் வேம்புலு நன்றி தெரிவித்தார். வேளாண் மற்றும் கால்நடை சம்மந்தப்பட்ட விபரங்கள் அறிய கட்டணமில்லாத தொலை பேசி எண் 1800 419 8800 தொடர்பு கொண்டு விளக்கம் பெற கேட்டுக் கொள்ளப்பட்டது.

Spread the love