May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நல்ல வேலை/நல்வேளை தலை

நல்ல வேலை நீண்ட காம்புடன் விரல்கள் போல் விரிந்து மனமுடைய இலைகளையும், வெண்மை, கரும் சிவப்பு கலந்த மலர்களை உடைய குறுஞ்செடி. இதை நல்வேளை தலை என்றும் அழைப்பதுண்டு. இலை, பூ, விதை மருத்துவப் பயனுடையவை. இலை நீர்க்கோவை நீக்கும். பூ கோழையகற்றி பசியுண்டாகும். விதை இசிவு அகற்றியாகவும் வயிற்றுப் புழு கொல்லியாகவும் குடல் வாயு அகற்றியாகவும் பயன்படும். சமூலத்தை இடித்து பிழிந்து விட்டு சக்கையை தலையில் வைத்து கட்டி எடுக்க நீர்க்கோவை, தலைபாரம், தும்மல், தலையில் குத்தல், குடைச்சல் ஆகியவை தீரும். இலை ஒரு பிடி, சுக்கு ஒரு துண்டு, மிளகு 6, சீரகம் ஒரு சிட்டிகை சிதைத்து அரை லிட்டர் நீரிலிட்டு 200 மில்லியாகக் காய்ச்சி தினம் மூன்று வேளை 50 மில்லி அளவு குடித்து வர வாத ஜுரம் சீதளம் ஆகியவை தீரும். இலைச்சாறு ஒரு துளி காதில் விட்டு வர சீழ் வருதல் நிற்கும். இலையை அரைத்து பற்று போட சீழ்பிடித்த கட்டிகள் உடைந்து ஆறும். பூச்சாறு 10 துளி தாய்ப்பாலில் கலந்து பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்க கபம், சளி நிறைந்து மூச்சுத்திணறல் சுரம் நீர்க்கோவை ஆகியவை தீரும்.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம், 94423 11505.

Spread the love