August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நவம்பரில் கச்சா எண்ணெய் உற்பத்தி 2431.44 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் இருந்தது-மத்திய அரசு தகவல்

புது தில்லி, டிச.22

கச்சா எண்ணெய்:

2021 நவம்பர் மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 2431.44 ஆயிரம் மெட்ரிக் டன்கள் எனும் அளவாக இருந்தது. மாத இலக்கைவிட இது 6.89 சதவீதம் குறைவு, 2020 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.22 சதவீதம் குறைவாகும்.2021 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 19868.42 ஆயிரம் மெட்ரிக் டன்கள் ஆக இருந்தது. இது இலக்கை விட 4.38 சதவீதம் குறைவு, முந்தைய ஆண்டை விட 2.74 சதவீதம் குறைவு.

இயற்கை எரிவாயு:

2021 நவம்பர் மாதத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தி 2869.47 எம் எம் எஸ் சி எம் (மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர்ஸ்) அளவாக இருந்தது. இது 2020 நவம்பர் மாதத்தை விட 23.09 சதவீதம் அதிகம், ஆனால் மாதந்திர இலக்கைவிட 12.8 சதவீதம் குறைவு. 2021 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் மொத்த உற்பத்தி 22777.21 எம் எம் எஸ் சி எம் ஆக இருந்தது. இது இந்த கால அளவிற்கான இலக்கைவிட 7.9 சதவீதம் குறைவாகவும், முந்தைய ஆண்டின் இதே கால அளவில் நடைபெற்ற உற்பத்தியைக் காட்டிலும் 21.78 சதவீதம் அதிகமாகவும் இருந்தது.

பெட்ரோலியப் பொருள்களின் மாதாந்திர உற்பத்தி:

2021 நவம்பர் மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் அளவு 22338.45 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக இருந்தது. இது அந்த மாதத்திற்கான இலக்கைவிட 4,39 சதவீதம் அதிகம். 2020 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.26 சதவீதம் அதிகமாகும். 2021 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் உற்பத்தி அளவு 163253.91 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 10.61 சதவீதம் அதிகம். ஆனால், இலக்கை விட 0.76 சதவீதம் குறைவாகும்.

Spread the love