August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாடு முழுவதும் 330 கூடுதல் ரயில்கள் இயக்க திட்டம்

புது தில்லி, ஏப்.26

நாடு முழுவதும் 330 கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து ரயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா தெரிவித்துள்ளதாவது:

நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று காரணமாக, பல நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர், சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

தொற்று பரவலிலும், நாடு முழுதும் 1,514 சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது; அத்துடன், பயணியர் ரயில்களையும் இயக்கி வருகிறது. மாநிலங்களின் கோரிக்கைக்கு ஏற்ப, கூடுதல் ரயில்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல், 330 கூடுதல் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love