September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாட்டின் தொழில்துறை உற்பத்தி விகிதம் கடந்த ஜூலையில் 11.5 சதமாக வளர்ச்சி

புது தில்லி, செப்.11

நாட்டின் தொழில்துறை உற்பத்தி விகிதமானது கடந்த ஜூலை மாதத்தில் 11.5 சதமாக வளர்ச்சி கண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது கடந்த ஆண்டில் வளர்ச்சியானது 10.5 சதமாக வீழ்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜூலையில் சுரங்க உற்பத்தி துறை வளர்ச்சி 19.5 சதமாக வளர்ச்சி கண்டுள்ளது. மின்சார உற்பத்தியானது 11.1 சதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் கோவிட் பேரிடரால் சரிவுப்பாதைக்கு சென்ற இந்த உற்பத்தி விகிதங்களானது, தற்போது மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த விகிதமானது 18.7 சதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதே கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 57.3 சதமாக சரிவினைக் கண்டது. சரிவு உள்ளிட்ட பல காரணங்களால் இந்த குறியீடானது சரிவினைக் கண்டுள்ளது.

இதே நடப்பு ஆண்டின் ஏப்ரல்-ஜூலை மாதம் வரையில் ஐஐபி விகிதம் 34.1 சதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலகட்டம் முந்தைய ஆண்டில் 29.3 சதம் வீழ்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதலே தொழில் துறையானது சரிவினைக் கண்டு வந்தது. எனினும் தற்போது லாக்டவுனில் பற்பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில்துறையானது மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம், தொழில் துறை குறித்தான குறியீடுகள் சந்தைக்கு சாதகமாக வந்துள்ளன.

இனி வரும் மாதங்களில் இந்த வளர்ச்சி விகிதமானது, இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதனால் வேலை வாய்ப்பு விகிதங்களும் வளர்ச்சி பாதைக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love