மும்பை, மே 12
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை ஜப்பானைச் சேர்ந்த நோமுரா நிறுவனம் 10.8 சதமாக குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து நோமுரா நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: பல்வேறு சாதகமான சூழல்களைக் கருத்தில் கொண்டு நடப்பு 2021-22ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10.8 சதமாக இருக்கும் என முன்பு கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், நாட்டில் தற்போது கோவிட் 2ம் அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக, பல்வேறு மாநிலங்கள் பொதுமுடக்க அறிவிப்புகளை வெளியிட்டு அதனை படிப்படியாக நீட்டித்தும் வருகின்றன. இதன் தாக்கம் இரண்டாவது காலாண்டில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
இதுபோன்ற சாதகமற்ற அம்சங்களை பார்க்கும் போது நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10.8 சதம் அளவுக்கே இருக்கும் என்பது மறுமதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளதாக நோமுரா தெரிவித்துள்ளது.