September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 சதம் அதிகரிக்கும்: என்சிஏஇஆர் இயக்குநர் தகவல்

புது தில்லி, செப்.13

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதம் அதிகரிக்கும் என்று பொருளாதார விவகாரம் சார்ந்த ஆய்வு மையமான என்சிஏஇஆர் இயக்குநர் ஜெனரல் பூணம் குப்தா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: நடப்பாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதமானது பல்வேறு அளவினைக் கொண்டதாக இருந்தாலும் ஒட்டுமொத்தமான வளர்ச்சி 10 சதம் அளவுக்கு இருக்கும். இதற்கு பொருள் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட இடையூறு, உற்பத்தி மற்றும் தேவைக்கான இடைவெளி அதிகரிப்பு, வழக்கமான மற்றும் தொடர்பு ரீதியான சேவை துறை தொய்வு ஆகியவை காரணிகளாக இருக்கும்.

கொரோனா தொற்று பரவல் காலத்தின் இரண்டு ஆண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் மிகச் சிறிய அளவில் நிகர வளர்ச்சி தெரிகிறது. அந்த வகையில் பார்க்கும்போது 2019-20-ல் எட்டப்பட்ட வளர்ச்சியைக் காட்டிலும் 2021-22-ல் சற்று அதிகமாக இருக்கும்.

மேலும், நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 20.1 சதமாக உள்ளது. கொரோனா பரவல் இரண்டாவது அலை தீவிரமடைந்த சூழலில் இத்தகைய வளர்ச்சி பாராட்டக்குரியது என்றார். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நாட்டின் ஜிடிபி -24.4 சதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love