October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.3 சதத்தை எட்டும்: உலக வங்கி கணிப்பு

வாஷிங்டன், அக்.8

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 8.3 சதவீதத்தை எட்டும் என்று உலக வங்கி கணித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அரசு முதலீடு அதிகரிப்பு, உற்பத்தியை அதிகரிக்க ஊக்கச்சலுகை உள்ளிட்ட காரணங்களால் இத்தகைய வளர்ச்சி சாத்தியமாகும் என்று உலக வங்கி வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் மாதம் வரையிலான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த நிதி ஆண்டின் வளர்ச்சி விகிதம் 8.3 சதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் இது 7.5 சதமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் ஜிடிபி 9.5 சதத்தை எட்டும் என ஆர்பிஐ கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று பரவலால் ஏற்பட்ட பொருளாதார ஸ்திரமற்ற சூழல் காரணமாக நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5 சதம் முதல் 12.5 சதம் வரை இருக்கலாம் என உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஹன்ஸ் டிம்மர் தெரிவித்துள்ளார்.

Spread the love