August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 9.1 சதமாக அதிகரிக்கும்: மோர்கன் ஸ்டான்லி

புது தில்லி, மே 7

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 9.1 சதமாக அதிகரிக்கும் என அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு மற்றும் நிதியியல் வங்கி சேவை அளிக்கும் மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: நாட்டில் கோவிட் தொற்றின் 2ம் அலையை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், 3வது அலை கட்டாயம் வரும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், நாட்டின் பணவீக்கம் குறித்து, மோர்கன் ஸ்டான்லி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 9.1 சதம் வரையில் உயரும் எனக் கணித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இதன் அளவு 7.4 சதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் உணவு பணவீக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கமும் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.

பொதுவாக மொத்த விலை பணவீக்கம் என்பது குறிப்பிட்ட பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றத்தைக் கணக்கீட்டு நாட்டின் பணவீக்கத்தை அளவீடும் முறை. இதேபோல் இந்தியா தற்போது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் நுகர்வோர் பணவீக்க குறியீடு மக்கள் தங்கள் வீட்டில் வாங்கும் பொருட்களின் விலையை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதாகும்.

இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் நுகர்வோர் பணவீக்க குறியீட்டின் அளவு 3.9 சதமாக இருக்கும் என கணித்துள்ளது. இது பிப்ரவரி மாதம் 5.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love