July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாட்டின் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த ஏப்ரலில் விற்பனையில் சரிவு

புது தில்லி, மே 3

நாட்டின் முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்கள், கடந்த ஏப்ரல் மாதத்தில், விற்பனையில் சரிவை கண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இது குறித்து விரிவான செய்தியாவது:

முன்னணி நிறுவனங்களான மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரலில், நாடு தழுவிய பொது முடக்கத்தால் வாகன விற்பனை எதுவும் நடைபெறவில்லை. எனவே, இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் மட்டுமே ஒப்பீடு செய்து பார்க்க இயலும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகியின் விற்பனை, கடந்த ஏப்ரலில், 4 சதம் சரிவைக் கண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இந்நிறுவனம், 1.67 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், ஏப்ரலில், 1.60 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஆல்டோ உள்ளிட்ட மினி கார்களின் விற்பனை மட்டும், 2 சதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும், ஏற்றுமதி மட்டும், ஏப்ரலில், 49 சதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை, கடந்த ஏப்ரலில், 41 சதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த மார்ச்சில், 66, 609 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், ஏப்ரலில், 39,530 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. வர்த்தக வாகன பிரிவை பொறுத்தவரை, உள்நாட்டு விற்பனை, 61 சத சரிவைக் கண்டுள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் ஏப்ரல் மாதத்தில், 8 சதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், 64, 621 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், ஏப்ரலில், 59,203 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.

டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில், இந்நிறுவனம் உள்நாட்டில், 15,001 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த ஏப்ரலில், 9,622 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில், பொது முடக்கம் காரணமாக எந்த வாகனமும் விற்பனை ஆகவில்லை.

Spread the love