August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாட்டில் அடுத்தடுத்த கோவிட் அலைக்கு வாய்ப்பு: பிட்ச் நிறுவனம் எச்சரிக்கை

புது தில்லி, மே 11

இந்தியாவில் கோவிட் தொற்று தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தாவிட்டால், அடுத்தடுத்து கோவிட் அலை உருவாக வாய்ப்புள்ளது என பிட்ச் ரேட்டிங் நிறுவனம் எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து பிட்ச் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மே 5-ம் தேதி நிலவரப்படி இந்திய மக்கள் தொகையில் 9.4 சதம் பேர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 9ம் தேதி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 16.94 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணி மெதுவாக நடந்து வருகிறது. தடுப்பூசி பணிகள் மெதுவாக நடந்தால், இந்தியாவில் தற்போதைய 2-வது அலை முடிந்தபின், அடுத்தடுத்து கோவிட் அலைகள் உருவாகும் சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது என எச்சரித்துள்ளது.

மேலும், இரண்டாவது அலையில் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாக இருந்தபோதிலும் முதல் அலையில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு 2வது அலையில் ஏற்படவில்லை. தற்போதுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தினாலும், பொருளாதார நடவடிக்கையை பாதிக்காத வகையில் அது இருந்து வருகிறது. ஆனால் அதிகமான மாநிலங்களில் நீண்டகால பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்தினால் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளது. இவ்வாறு பிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love