September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாட்டில் உள்ள இரண்டு ஆலைகளை மூடுகிறது ஃபோர்டு

புது தில்லி, செப்.11

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது இரண்டு உற்பத்தி ஆலைகளையும் மூடவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து டுவிட்டரில் ஃபோர்டு தெரிவித்திருப்பதாவது:

இந்தியாவில் உற்பத்தி செயல்பாடுகளை ஃபோர்டு மாற்றியமைக்கிறது. அதன்படி சென்னை, சனந்தில் உள்ள ஆலைகள் இனி கார் உற்பத்தி செய்யாது என்றும், 2021- 4வது நிதியாண்டு காலாண்டுடன் முடிவடையும் காலத்துடன் ஏற்றுமதிக்கான வாகன உற்பத்தியை சனந்த் ஆலை நிறுத்திக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னையில் உள்ள இன்ஜின் தயாரிப்பு மற்றும் வாகனங்களை அயஸம்பிள் செய்யும் ஆலை 2022ம் ஆண்டு இரண்டாம் காலாண்டுடன் பணியை நிறுத்திக் கொள்ளும்.

அதுவரை, ஃபோர்டு நிறுவனம் தனது தயாரிப்புகளை இறக்குமதி மூலம் இந்தியாவில் விற்பனை செய்வதோடு இப்போது இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து டீலர்கள் சேவைகளை வழங்க உதவும். இவ்வாறு அந்த டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்தியாவில் இருந்து ஜெனரல் மோட்டார்ஸ், ஹார்லி டேவிட்சன் போன்ற நிறுவனங்கள் இந்திய ஆட்டோமொபைல் சந்தையை விட்டு வெளியேறிவிட்டன. இந்நிலையில், ஃபோர்டு நிறுவனமும் வெளியேறும் தகவல் இத்துறைக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Spread the love