August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேருக்கு கோவிட் தொற்று

தடுப்பூசியின் எண்ணிக்கை 13 கோடியைக் கடந்தது
நாடு முழுவதும் 21,57,538 பேருக்கு சிகிச்சை
கோவிUல்டு தடுப்பூசியின் விலை உயர்த்திய சீரம்

புது தில்லி, ஏப்.21

நாட்டில் கோவிட் பெருந்தொற்றின் இரண்டாது அலை பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.­­

இந்நிலையில் இந்தியாவில் தொற்று பரவல் குறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூ­ண் தெரிவித்துள்ளதாவது:

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ், இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 13 கோடியைக் கடந்துள்ளது.

இன்று காலை 7 மணி வரை, 19,01,413 முகாம்களில்‌ 13,01,19,310 பயனாளிகளுக்கு, கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 29 லட்சம் டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

95-வது நாளான ஏப்ரல் 20 அன்று நாடு முழுவதும் 29,90,197 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகா, கேரளா, சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கொவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 76.32 விழுக்காடு பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 62,097 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 29,574 பேரும், தில்லியில் 28,395 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 21,57,538 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 13.82 சதவீதமாகும்.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,32,76,039 ஆக (85.01%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,67,457 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,023 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய உயிரிழப்பு விகிதம் 1.17 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கோவிUல்டு தடுப்பூசியின் விலை உயர்வு

நாட்டில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிUல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிற நிலையில், வரும் மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என அறிவித்த நிலையில் தடுப்பூசி விலைப்பட்டியலை புனே சீரம் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் ரூ.400-க்கும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.600-க்கும் தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி உற்பத்தியில் 50 சதம் அரசுக்கும், 50 சதம் தனியார் தொகுப்புக்கும் வழங்கப்படும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரெம்டெசிவிர் மீதான சுங்க வரி நீக்கம்

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டி. வி சதானந்த கவுடா தனது டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், “” மருந்துகள் துறையின் பரிந்துரை மீதான உடனடி தேவையை கருத்தில் கொண்டு, ரெம்டெசிவிர் மற்றும் அதன் ஏபிஐ/கேஎஸ்எம் மீதான சுங்க வரியை வருவாய்த்துறை நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை நாட்டில் ரெம்டெசிவர் ஊசி கிடைப்பதை அதிகரிக்கும்” என தெரிவித்துள்ளார்.

Spread the love