காந்திநகர், ஏப்.27
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எம்ஜி மோட்டார்ஸ் இந்திய நிறுவனங்கள் வர்த்தகம் இல்லாமல் தவித்து வந்த நிலையிலும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுத் தற்போது தவிர்க்க முடியாத நிறுவனமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், 2020 முதல் கோவிட் தொற்றுக் காரணமாக அதிகளவிலான வர்த்தகத் தடுமாற்றங்களைச் சந்தித்து வந்த சூழ்நிலையில், 2020ம் ஆண்டின் கடையில் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றுச் சரிவில் இருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தற்போது கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தனது தொழிற்சாலையை மூடிய நிலையில் தற்போது எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனமும் ஒரு வாரம் தனது தொழிற்சாலையை மூடியுள்ளது.
இந்திய கார் விற்பனை சந்தையில் மிகவும் கடினமான வர்த்தகச் சந்தையான எஸ்யூவி பிரிவில் யஹக்டர் கார் அறிமுகத்தின் மூலம் பெரிய அளவிலான வர்த்தகத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், கோவிட் தொற்றுக் காரணமாக ஊழியர்கள் நலன் கருதி குஜராத் மாநிலத்தின் ஹலோல் பகுதியில் இருக்கும் தொழிற்சாலையை மூட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வருகிற ஏப்ரல் 29 முதல் மே 5 வரையிலான காலத்திற்கு எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் குஜராத் தொழிற்சாலை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா-வின் தலைவர் ராஜீவ் சாபா-வும் இதனை உறுதி செய்துள்ளார்.