June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாட்டில் கோவிட் தொற்று அதிகரிப்பால் இந்திய விமானங்களுக்கு கனடா, யுஏஇ தடை

ஒட்டவா, ஏப்.23

இந்தியாவில் கோவிட் தொற்று இரண்டாவது அலை பரவி மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாள் ஒன்றுக்கு மட்டும் 3 லட்சத்தை கடந்து கடும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு பயணிகள் விமானங்கள் கனடா வருவதற்கு 30 நாட்கள் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்களில், பயணிகளுக்கு தொற்று பாதிப்பு இருப்பது அதிகரித்து வருவதால் இந்த தடை விதிக்கப்படுவதாக கனடாவின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து வணிக மற்றும் தனி விமானங்களுக்கும் இந்த 30 நாள் தடை பொருந்தும் எனினும் சரக்கு விமானங்களுக்கு தடை நடவடிக்கை பொருந்தாது எனவும் கனடா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு பத்து நாட்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் விமானத்தை 30% ஆஸ்திரேலிய அரசு குறைத்துள்ளது.

Spread the love