October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாட்டில் டெஸ்லா கார் தயாரிப்பை துவக்கினால் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்: கட்கரி

புது தில்லி, அக்.11

அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் பேட்டரி கார் தயாரிப்பு ஆலையைத் தொடங்கினால் அதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் மத்திய அரசு அளிக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியா கான்கிளேவ் 2021 மாநாட்டில் பேசிய அவர் மேலும் கூறியதாவது: மத்திய அரசிடமிருந்து எத்தகைய உதவியை எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரிவித்தால் அதை முழுவதுமாக அளிக்க அரசு தயாராக உள்ளது என்பதை டெஸ்லா நிறுவனத்திடம் தெரிவித்துள்¼ளன் என்றார். இருப்பினும் டெஸ்லா நிறுவன அதிகாரிகளுடன் வரிச்சலுகை குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம் கூட வரிச் சலுகை கோருவதற்குப் பதிலாக இந்தியாவில் ஆலை அமைத்து உற்பத்தியைத் தொடங்குங்கள் என டெஸ்லா நிறுவனத்திடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் பேட்டரி கார்கள் மீது 60% முதல் 100% வரை வரி விதிக்கப்படுகிறது.

இது குறித்து மத்திய அரசுக்கு டெஸ்லா எழுதியுள்ள கடிதத்தில் 110%வரை வரி விதிப்பதால் 40 ஆயிரம் டாலரை எட்டி விடுகிறது. முற்றிலும் சூழல் பாதுகாப்பு நிறைந்த இந்த கார்களுக்கு ஒரே நிலையான 40% வரியை விதிக்கலாம் என கோரியது, மற்றும் சமூல நல சர்சார்ஜ் 10 சதத்தை தள்ளுபடி செய்யலாம் என குறிப்பிட்டிருந்தது. வரி குறைப்பு நடவடிக்கையால் இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பாதிப்பும் ஏற்படாது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

Spread the love