புது தில்லி, ஏப்.22
நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவும் நிலையில், தினமும் 7,500 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மாநிலங்களுக்கு 6,600 டன் ஆக்சிஜன் வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூசண் தெரிவித்துள்ளதாவது:
நாங்கள் தினமும் 7,500 டன் ஆக்சிஜன் தயாரிக்கிறோம் என்றும், மாநிலங்களுக்கு மருத்துவ தேவைக்காக தினமும் 6,600 டன் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது என தெரிவித்தார். மருத்துவ பயன்பாட்டுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கச் செய்யும் வகையில், மிகச் சில தொழிற்சாலைகள் தவிர, பிற தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜன் வினியோகம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்¼ளாம் என்றார். மேலும், கோவிட் விசயத்தில் மாநில அரசுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க, வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று பேரிடரை எதிர்கொள்ளும்போது, சில சமயங்களில் அச்சமும், குழப்பமும் ஏற்படலாம். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.