August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாட்டில் 85 சதம் சிறு தொழில்கள் பாதிப்பு டன் & பிராட்ஸ்ட்ரீட் நிறுவன ஆய்வு தகவல்

புது தில்லி, ஏப்.23

நாடு முழுவதும் கோவிட் தொற்று பேரிடரால், 82 சதம் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் மூலம் தகவல்கள் தெரியவந்துள்ளது.

இது குறித்து டன் & பிராட்ஸ்ட்ரீட் நிறுவன ஆய்வுகள் தெரிவித்துள்ளதாவது:

இந்நிறுவனம் நடத்திய ஆய்வில் 82 சதம் வணிகங்கள் கோவிட் தொற்று பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வானது 250 நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட நிலையில், இது உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் என பலரிடமும் நடத்தப்பட்டது. குறிப்பாக இந்த சர்வேயானது ரூ.250 கோடி வருடம் டர்ன் ஓவர் செய்யும் நிறுவனங்களிடம் நடத்தப்பட்டது ஆகும்.

கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இழந்த தேவையை மீட்டெடுக்க இன்னும் கிட்டதட்ட ஒரு வருடம் ஆகும் என பதிலளித்தவர்களில் 70% பேர் தெரிவித்துள்ளனர்.

இந்தியா கடந்த ஆண்டே கோவிட்டால் பொருளாதாரமும் மிக மோசமான சரிவினைக் கண்டது. இதற்கிடையில் இந்த ஆய்வில் பதிலளித்த நிறுவனங்களில் 60% நிறுவனங்கள் தங்களுக்கு ஏதேனும் உதவிகள் கிடைக்குமா? அரசு ஆதரவு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கின்றன.

இவ்வாறு பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் சவால்களாக கருதியது, ஒன்று சந்தை அணுகல், உற்பத்தி திறன், நிதி அணுகல் என தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஏப்ரல் 2020 காலகட்டத்தில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட போது, 9 சதம் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதே ஆகஸ்ட் மாத நிலவரப்படி 70 சதம் பாதிக்கப்பட்டதாகவும், இதே பிப்ரவரி 2021 இறுதியில் இது 40 சதம் ஆக குறைந்துள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Spread the love