ஈரோடு, ஜூலை 4
ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டாரத்தில் கலைஞரின் அனைததுக் கிராம ஒருகிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களான கொளத்துப்பாளையம் கிராமத்தில் 24.6.22 அன்றும், கொந்தம் கிராமத்தில் 30.6.22 அன்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் தலா 40 விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை குறைந்த முதலீட்டில் எவ்வாறு தயாரித்துக் கொள்வது பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சியை சார்ந்த விஞ்ஞானிகள் கிருபாகரன் மற்றும் ஹரிகரன் ஆகியவர்கள் நாட்டுக்கோழி வளர்ப்பில் கோழிகளுக்கு ஏற்படும் நோய்கள் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள், தடுப்பு ஊசிகள் போடுவதன் அவசியம், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள், கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை குறைந்த முதலீட்டில் எவ்வாறு தயாரித்துக் கொள்வது என்பதைப் பற்றியும் பயிற்சி அளித்தனர். உதவி வேளாண்மை அலுவலர்கள் என்.நாகராஜ் கலந்துக்கொண்டு துறையின் மானிய திட்டங்களைப் பற்றி விளக்கினர். தொழில்நுட்ப மேலாளர் கே.எஸ். கிருத்திகா, உதவி தொழில்நுட்ப மேலாளர் எஸ்.சதீஸ்குமார் கலந்துக்கொண்டு பயிற்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
Spread the love