May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாட்டுக்கோழி வளர்ப்பு மூலம் தொழில் முனைவோர் உருவாகும் திட்டம்

மதுரை, மே 5

தேசிய வேளாண் அபிவிருத்தி (RKVY) திட்டத்தில் நாட்டுக்கோழி (1000 எண்ணிக்கை) வளர்ப்பு மூலம் தொழில் முனைவோர் உருவாகும் திட்டத்தில் பயனடைந்த மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பயனாளிகளை ஆய்வு செய்தார்கள்.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் சொக்கலிங்கபுரம் ஊராட்சி உதினிப்பட்டி கிராமத்தில் பயனாளி அருணாச்சலத்தின் பண்ணையில் டாக்டர் N.R.சரவணன், உதவி இயக்குனர் கால்நடை பராமரிப்பு துறை, ஆய்வு செய்து குஞ்சு பொரிப்பான் இயந்திரங்களின் செயல்பாடுகளை கையாளும் விதம் மற்றும் செயல்முறை விளக்கம் அறிவுரைகள் வழங்கினார். கொட்டாம்பட்டி கால்நடைத்துறை டாக்டர் ஜெகதீஷ், டாக்டர் ஆறுமுகம், உடன் இருந்தார்கள்.

Spread the love