May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாட்டு காய்கறி விலை சரிவு

திருப்பூர், மே 11

நாட்டுக்காய்கறி விலை குறைந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் அதிகபட்சமாக பீன்ஸ், ரூ.80க்கும், தக்காளி கிலோ, ரூ.10க்கும் திங்கள்கிழமை விற்பனையானது. கடந்த, 20 நாட்களாக கிலோ, ரூ.10க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம் மற்றும் பிற பகுதியில் இருந்து வரத்து அதிகமானதால், உருளைக்கிழங்கு கிலோவுக்கு ரூ.5 குறைந்து, ரூ.35க்கு விற்பனையானது. சின்ன வெங்காயம், கிலோ ரூ.35க்கு விற்பனையாகிறது. வெளிமாநிலத்தில் இருந்து வரும் பெரிய வெங்காயம் வரத்து அதிகரிப்பால் கிலோ, ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பச்சைமிளகாய் ரூ.40, கத்தரி ரூ.30, முருங்கை ரூ.20, புடலங்காய் ரூ.20, சுரைக்காய் ரூ.12, பாகற்காய் ரூ.35, முள்ளங்கி ரூ.20, அவரை ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. மலை காய்கறியான பீன்ஸ், ரூ.80க்கும், கேரட், ரூ.40க்கும் விற்பனையாகிறது.

Spread the love