நானே என்பது அனு மற்றும் மூலக்கூற்றை, மிக நுண்ணிய அளவில் கையாண்டு, உற்பத்தி செய்யும் ஒரு தொழில் நுட்பம் தான் நானோ தொழில் நுட்பம். அனைத்து துறைகளையும் ஆள போகிறது” என அறிவியலாளார்கள் கூறிய போது பலரும் நம்பவில்லை. தற்போது விவசாயத் துறையில் கோலோச்ச தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
இந்த நானோ யூரியாவை “இப்கோ” எனப்படும் இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகின் முதல் “நானோ யூரியா திரவ ஆலையை” கடந்த மாதம் குஜராத்தில் உள்ள கலோலில் பாரத பிரதமர் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய காலகட்டத்தில் விவசாயத்தில் ஆள் பற்றாக்குறை, உரத்தட்டுபாடு இவைகளை எளிதில் “டிரோன்” மூலமாக உரம் தெளிப்பதால் விவசாய பணிகள் வேகமாக வெற்றிகரமாக செய்ய முடியும். ஒரு ஏக்கர் நிலத்தை 5-8 நிமிடங்களில் தெளிக்க முடியும். 500 மி.லி இந்த உரத்தின் விலை ரூ.240 மட்டுமே. நானோ யூரியா பயன்படுத்துவதால் எந்த உயிரினங்களுக்கு எந்த பிரச்சனை இல்லை, சுற்றுப்புற சூழல் பாதிப்படையாது, இலைவழி தெளிப்பாக, மேலுரமாக
பயன்படுத்தலாம். 90 வகை பயிரில் 11,000 இடங்களில் பரீட்சார்த்த முறையில் பயன்படுத்தி பார்த்த போது 10 முதல் 25 சதவித மகசூல் கிடைத்தாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இலைவழி தெளிப்பாக, TOP DRESSING, மேலுரமாக பயன்படுத்தி இந்த தொழில்நுட்பத்தை கையாளுவோம். கூடுதல் வருவாய் பெறுவோம்.
நானோ யூரியா – ஒரு பார்வை

Spread the love