August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நான்காவது காலாண்டில் கனரா வங்கி ரூ.1,011 கோடி லாபம் ஈட்டியது

மும்பை, மே 19

நான்காவது காலாண்டில் பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கியின் தனிப்பட்ட லாபம் ரூ.1,010.87 கோடி ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கனரா வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2020-21ம் நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் வங்கியின் தனிப்பட்ட மொத்த வருமானம் ரூ.21,522.60 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2019-20ம் நிதியாண்டில் வங்கி ஈட்டிய வருவாய் ரூ.14,222.39 கோடியுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகம்.

2020 ஜனவரி-மார்ச் காலாண்டில் வங்கி ரூ.3,259.33 கோடி நிகர இழப்பை சந்தித்திருந்த நிலையில் 2021 மார்ச் காலாண்டில் ரூ.1,010.87 கோடி தனிப்பட்ட நிகரலாபத்தை பதிவு செய்துள்ளது. கணக்கீட்டு காலாண்டில் வாராக் கடனுக்கான ஒதுக்கீடு ரூ.4,875.28 கோடியிலிருந்து ரூ.4,427.53 கோடியாக குறைந்துள்ளது.

2020-21 முழு நிதியாண்டில் வங்கி ரூ.2,557.58 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. அதேநேரம், 2019-20 நிதியாண்டில் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.2,235.72 கோடியாக இருந்தது. மொத்த வாராக் கடன் 8.21 சதத்திலிருந்து 8.93 சதமாக உயர்ந்துள்ளது. அதே நேரம், நிகரவாராக் கடன் விகிதம் 4.22 சதத்திலிருந்து 3.82 சதமாக குறைந்துள்ளது என கனரா வங்கி தெரிவித்துள்ளது.

Spread the love