மும்பை, மே 12
கிரானுல்ஸ் இந்தியா நிறுவனத்தின் நான்காவது காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் 38 சதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஆண்டு எங்களுக்கு மிகவும் சவால் நிறைந்தாக இருந்தது. இருப்பினும், அவற்றை சமாளித்து சிறப்பான செயல்பாட்டை நிறுவனம் பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அனைத்து
வகைகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 2021 மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த நான்காவது நிதியாண்டில் நிறுவனம் ஒட்டுமொத்த நிகரலாபமாக ரூ.127.56 கோடியை ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2019-20ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில்
ஈட்டிய லாபம் ரூ.92.33 கோடியுடன் ஒப்பிடும்போது 38.15 சதம் அதிகமாகும்.
ஒட்டுமொத்த செயல்பாட்டு வருமானம் ரூ.600 கோடியிலிருந்து ரூ.799 கோடியாக அதிகரித்துள்ளது.
நடப்பாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2020-21ம் நிதியாண்டில் நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.335 கோடியிலிருந்து ரூ.549 கோடியாக அதிகரித்துள்ளது. செயல்பாட்டு வருவாய் ரூ.2,599 கோடியிலிருந்து
உயர்ந்து ரூ.3,238 கோடியாக இருந்தது என கிரானுல்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.