August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நான்காவது காலாண்டில் லூபின் 18 சதம் உயர்வு

புது தில்லி, மே 14

நான்காவது காலாண்டில் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான லூபின் நிறுவனம் லாபம் 18 சதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020-21ம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருமானம் ரூ.3,783 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2019-20ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.3,846 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும் என தெரிவித்துள்ளது.

அதே நேரம், இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.390 கோடியிலிருந்து 18 சதம் அதிகரித்து ரூ.460 கோடியானது. நான்காவது காலாண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் மருந்துகளின் விற்பனை சிறப்பான அளவில் உயர்ந்தது.

2020-21 முழு நிதியாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருமானம் முந்தைய 2019-20ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.15,375 கோடியிலிருந்து ரூ.15,163 கோடியாக குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த நிகரலாபமாக நிறுவனம் ரூ.1,216 கோடியை ஈட்டியுள்ளது. அதேநேரம், 2019-20 நிதியாண்டில் நிறுவனத்துக்கு நிகர அளவில் ரூ.269 கோடி இழப்பு ஏற்பட்டது.

கடந்த நிதியாண்டுக்கு ரூ.2 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு ஈவுத்தொகையாக ரூ.6.5 வழங்க நிறுவனத்தின் இயக்குநர் குழு பரிந்துரை செய்துள்ளதாக லூபின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love