May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நான்காவது காலாண்டில் வென்ட் இந்தியா தனிப்பட்ட லாபமாக ரூ.6 கோடி ஈட்டியது

சென்னை, ஏப்.24

நான்காவது காலாண்டில் முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த வென்ட் இந்தியா நிறுவனம் ரூ.5.97 கோடியை தனிப்பட்ட லாபமாக ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

2021 மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் வாயிலாக தனிப்பட்ட முறையில் ரூ.5.97 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. அதேநேரம், இதற்கு முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்துக்கு ரூ.1.09 கோடி அளவுக்கு நிகர இழப்பு ஏற்பட்டது.

மதிப்பீட்டு காலாண்டில் மொத்த வருமானம் ரூ.23.64 கோடியிலிருந்து ரூ.42.89 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய தனப்பட்ட மொத்த வருமானம் ரூ.130.94 கோடியிலிருந்து ரூ.127.04 கோடியாக குறைந்துள்ளது. அதேநேரம், தனிப்பட்ட லாபம் ரூ.9.34 கோடியிலிருந்து ரூ.12.91 கோடியாக அதிகரித்துள்ளது.

பங்கு ஒன்றுக்கு ரூ.20 ஈவுத்தொகை வழங்க பரிந்துரைத்துள்ளதாக வென்ட் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love