May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ரூ.79 லட்சத்துக்கு ஏலம்

நாமக்கல், ஏப்.29

நாமகிரிப்பேட்டை கூட்டுறவு விற்பனை சங்கத்தில், புதன்கிழமை நடந்த ஏலத்தில், ரூ.79 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு சொந்தமான மஞ்சள் மண்டி உள்ளது. இங்கு புதன்கிழமை மஞ்சள் ஏலம் நடந்தது. 1,500 மூட்டைகள் ஏலத்திற்கு வரத்தாகின. மொத்தம், ரூ.79 லட்சத்திற்கு விற்பனையானது. விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சமாக, ரூ.7,709, அதிகபட்சமாக, ரூ.9,434க்கு விற்பனையானது. உருண்டை ரகம் குறைந்தபட்சமாக, ரூ.6,969, அதிகபட்சமாக, ரூ.8,339க்கு விற்பனையானது. பனங்காலி ரகம் குறைந்தபட்சமாக, ரூ.8,339, அதிகபட்சமாக, ரூ.19,369க்கு விற்பனையானது. விரலி, 1,100 மூட்டை, உருண்டை, 350 மூட்டை, பனங்காலி, 50 மூட்டை என, 1,500 மூட்டைகள், ரூ.79 லட்சத்திற்கு விற்பனையானது.

Spread the love