September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாமக்கலில் தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

நாமக்கல், செப்.11

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகயாக (12.09.2021) அன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறுவதையயாட்டி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அடிப்படை வசதி மேம்பாடு, சாலை வசதிகள், மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல், கழிவு நீர் கால்வாய் ஏற்படுத்துதல், குடிநீர் தேவைகள், குடிநீர் இணைப்புகள் வழங்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்ட பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஊராட்சி; ஒன்றிய குழுத்தலைவர்களுடன் கலந்துரையாடினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசும் போது தெரிவித்ததாவது,

நாமக்கல் மாவட்டத்தில், 12.09.2021 ஞாயிற்றுகிழமை அன்று 1,00,000 தடுப்பூசிகள் செலுத்திடும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. தங்கள் பகுதிகளில் அனைத்து பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில் தேவையான பணிகளை தன்னார்வத்தோடு மேற்கொள்ள வேண்டும். மேலும், ஊராட்சி பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று 12.09.2021 அன்று நடைபெறவுள்ள சிறப்பு தடுப்பூசி முகாம்கள் குறித்து எடுத்துரைத்து பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தங்கள் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களையும் தடுப்பூசி முகாம் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Spread the love