September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாமக்கல்லில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

நாமக்கல், செப்.9

எதிர்வரும் 4.11.2021 அன்று தீபாவளி பண்டிகையின்போது நாமக்கல் மாவட்டத்தில் வெடிபொருள் சட்டம் – 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் – 2008-ன்கீழ்; தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் விதி எண் 84 மற்றும் இதர விதிகளில்; தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்றி இணையதளம் வழியாக மட்டும் 30.9.2021-ற்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

மாவட்டத்திலுள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களில் மேற்படி விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம். மேற்படி விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.

1.விண்ணப்பதாரரின் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட் சைஸ்) அளவு புகைப்படம்;
2.விண்ணப்பதாரரின் முகவரி குறித்த ஆவணம் (ஆதார் அட்டை)
3.அடையாள அட்டை (வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை/வாக்காளர் அடையாள அட்டை/ஓட்டுநர் உரிமம்)
4.உரிமக் கட்டணம் ரூ.500/- ஐ அரசு கருவூல செலுத்துச் சீட்டு மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்திய செலுத்துச்சீட்டு (அசல்)
5.பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம்
6.சொந்தக் கட்டடம் எனில் மனுதாரர் பெயரில் உள்ள பட்டா (அல்லது) வாடகை கட்டடம் எனில் வாடகை ஒப்பந்தப்பத்திரம்
7.உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற பல்வகை வரி இரசீது
8.சுய உறுதிமொழி பத்திரம்
9.கட்டட அமைவிட வரைபடம் (அல்லது) கட்டட திட்ட அனுமதி இணைக்கப்பட வேண்டும்.
மேற்படி விண்ணப்பங்களை 30.9.2021 வரை மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

உரிமக் கட்டணம் ரூ.500/-ஐ கீழ்காணும் அரசு கணக்குத் தலைப்பில் IFHRMS என்ற இணையதளம் வாயிலாக செலுத்தி அதற்கான அசல் செலுத்துச்சீட்டு இணைக்கப்பட வேண்டும். தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் அளிப்போர் பொதுமக்களுக்கு சிரமமில்லாத ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கவும் விபத்து இல்லாத மகிழ்ச்சியான தீபாவளி பண்டிகையினை கொண்டாடிட ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Spread the love