October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.27 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்

நாமக்கல், அக்.6

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.21 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது. மொத்தம் 850 மூட்டை பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்ளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் கூட்டுறவு சங்க அலுவலர்கள் பருத்தி ஏலத்தை நடத்தினர். இதில் ஒரு குவிண்டால் அதிகபட்சம் ரூ.10,069க்கும், குறைந்த பட்சம் ரூ.6,760க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.21 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர எள், பருத்தி விற்பனை நடந்தது. சின்னசேலம், ஆத்தூர், கெங்கவல்லி, காங்கேயம், பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், வீரகனூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் 40 மூட்டை எள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவற்றை வாங்க பவானி, அனுமன்பள்ளி, முத்தூர், காங்கேயம், திருப்பூர், திருச்செங்கோடு, சங்ககிரி, ஈரோடு பகுதிகளைச்சேர்ந்த சுமார் 10 வியாபாரிகள் வந்தனர். ரூ.2 லட்சத்திற்கு எள் விற்பனையானது. சிவப்பு எள் ரூ.79.20 முதல் 89.70 வரை விற்பனையானது. கருப்பு எள் ரூ.89.90 முதல் 102.90 வரை விற்பனையானது.

200 மூட்டை பருத்தி ரூ.4 லட்சத்திற்கு விற்பனையானது. பிடி காட்டன் குவிண்டால் ரூ.5,369 முதல் ரூ.7,879 வரையும், சுரபி ரூ.7,500 முதல் ரூ.10,050 வரையும் விற்பனையானது.

Spread the love