நாமக்கல், ஜூன் 29
நாமக்கல் மண்டலத்தில் முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு அவற்றிலிருந்து தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முட்டை நுகர்வை பொருத்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு என்ற தனியார் அமைப்பு முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில் கடந்த 12 நாட்களில் பண்ணையில் முட்டை கொள்முதல் விலை 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2 வார காலத்தில் 2 நாட்களுக்கு ஒரு முறை என்ற விகிதத்தில் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 1-ந்தேதி (பைசாவில்) 480 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து 6-ம் தேதி 485 காசாகவும், 9-ந் தேதி 490 காசு, 11-ந்தேதி 495 காசு, 13-ந்தேதி 505 காசு, 16-ந் தேதி 510 காசு, 23-ந் தேதி 520 காசு, 25-ந் தேதி 535 காசு, 26-ந்தேதி 550 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.