September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம்

நாமக்கல், செப்.11

நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறை சார்பில் 13.09.2021, 16.09.2021 முதல் 18.09.2021 வரை முதல் சுற்று, 20.09.2021, 23.09.2021 முதல் 25.09.2021 வரை இரண்டாம் சுற்றும் 27.09.2021 அன்று விடுபட்ட குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.

1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20-30 வயது வரை உள்ள கர்ப்பிணி அல்லாத பெண்களுக்கும் குடற்புழு நீக்க மருந்து இரண்டு சுற்றுகளாக வழங்கப்படுகிறன்றது. அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இக்குடற்புழு நீக்க மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 5இ89இ401 குழந்தைகளுக்கும்;, 20-30 வயது வரை உள்ள கர்ப்பிணி அல்லாத பெண்கள் 1,53,830 நபர்களுக்கு குடற்புழு நீக்கும் அல்பென்டசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது. அங்கன்வாடி மையங்கள்;, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவ மாணவிகள் அனைவருக்கும் இம்மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு குடற்புழுவால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படும். அதனால் குழந்தைகள் ஆரோக்கியமாக நன்கு வளர முடியும். இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும்;. குறிப்பாக இரத்தசோகை குறைபாடு வராமல் தடுக்கப்படும். மேலும் குடற்புழு தாக்கத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாணவர்களின் பள்ளி வருகை பாதிப்பு தவிர்க்கப்படும். இதனால் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போன்ற இதர நடவடிக்கைகளிலும் அதிக ஊக்கம் மற்றும் புத்துணர்வுடன் பங்கேற்கலாம்; மேலும் முகாம் நடைபெறும் இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன் கள பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Spread the love