- பொதுப் பெயர் :- நிலாவாரை (அ) சென்னா
தாவரவியல் பெயர் – கேசியாஅங்குஸ்டி@ போலியா( ஊயளளயை யபேரளவi கடிடயை)
குடும்பம் – லெக்குமினோசே(டுநபரஅinடிளயந)
மருத்துவப் பயன்கள் :
நிலாவாலையின் இலை மற்றும் காய்களில் சென்னோஸைடு மூலப் பொருட்கள் “A” மற்றும் “B” அடங்கியுள்ளது. இவை “மூலம்” மற்றும் மலச்சிக்கல் நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உலகளவில் நிலாவாரை ஒன்று மட்டுமே இயற்கை மலமிளக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. - பொதுப் பெயர் – நீர் பிரம்மி(கூhலஅந)
தாவரவியல் பெயர் – தைமஸ் வல்காரிஸ் (கூhலஅரள எரடபடியசளை)
குடும்பம் – லேமியேசியே(டுயbயைவயந )
மருத்துவப் பயன்கள் :
- தைம் காரத்தன்மையுடன் சுகந்த வாசனையுடைய ஒரு தாவரம்
- இதன் இலையிலிருந்து வாசைன எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
- இந்த எண்ணெய் தைமால் (கூhலஅடிட),கார் வாக்ரால்(ஊயசஎயஉசடிட)இபோர்னியோல் (Bடிசநேடிட), யூகலிப்டால் (நுரஉயடலிவடிட)இ மீத்தேன் (ஆநவாயநே) மற்றும் தைமின் (கூhலஅநநே ) போன்றவேதிப்பொருட்கள் உள்ளன.
- இந்த எண்ணெய் கிருமி நாசினி (Aவேளைநிவiஉ) இசிவகற்றி (யவேipடிளஅடினiஉ) மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி (Aவேibiடிவiஉ) போன்ற மருந்துவகுணங்களுடையது
- இந்த எண்ணெய் வாசனைக்காக மீன் மற்றும் ஏனைய அசைவ உணவுகள் தயாரிப்பில் சேர்க்கப்படுகிறது.
- இது உணவின் செரிமானத் தன்மையை அதிகரிப்பதோடு நுரையீரலுக்கு வலிமை அளிக்கிறது.
- இருமல், சளி, தொண்டை வலி மற்றும் தலைவலி போன்ற நோய்களுக்கும ருந்தாகப் பயன்படுகிறது.
- பற்பசைகள், சோப்பு தயாரிப்பதில் பயன்படுவதோடு மட்டுமல்லாமல் தைம் இலையில் தேநீர் தயாரித்து அருந்தலாம்.
- தைம் எண்ணெய், மூலிகை குளியல் அதிகம் மற்றும் முகம் கழுவுவது போன்ற சிகிச்சைகளில் அதிகம் பயன்படுகிறது.
- பொதுப் பெயர் – நித்ய கல்யாணி(Pநசறைiமேடந )
தாவரவியல் பெயர் – கெத்தரான்தஸ்ரோஸியஸ் (ஊயவாயசயவோரளசடிளநரள)
குடும்பம் – அபோசைனேஸியே(Apடிஉலயேஉநயந)
மருத்துவப் பயன்கள் :
- நித்யகல்யாணி இலைகளில், வின்கிரிஸ்டின், (ஏinஉசளைவiநே) வின் பிளாஸ்டின் (ஏinடெடிளவin) போன்றஆல்கலாய்டுகள் உள்ளன.
- நித்யகல்யாணிவேரில் ரிசெர்பின் (சுநளநசிiநே)இஅஜ்மால்சின் (Aதஅயடஉiநே), செர்பன்டைன் (ளுநசிநவேiநே) போன்ற மூலப் பொருட்களும் உள்ளன.
- நித்யகல்யாணி இலைகளில் உள்ளஅல்கலாய்டுகள் புற்றுநோய் மருத்துவத்தில் பயன்படும் ஊசி மருந்துகள் தயாரிக்க பெரிதும் பயன்படுகிறது. (ஏiமேடிடநரஉடிடெயளவiநே).
- நித்யகல்யாணி வேரில் உள்ள அல்கலாய்டுகள் லுகேமியா (டுரமநயஅயை) என்றும் இரத்தப் புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் “உறாட்ஜ்கின்ஸ்” எனும் புற்றுநோயைக் குணப்படுத்த பெரிதும் பயன்படுத்துகின்றனர். மேலும் உயர் இரத்த அழுத்தநோயைக் குணப்படுத்தபெரிதும் உதவுகிறது.
- பொதுப் பெயர் – இசப்கல் (ஐளயபெடிட)
தாவரவியல் பெயர் – ப்ளாண்டோகோ ஓவேட்டா(Pடயவேயபடிடிஎயவய )
குடும்பம் – ப்ளாண்டா ஜினேசியே (Pடயவேயபiயேஉநயந )
நமது நாட்டில் மருத்துவப்பயிர் உற்பத்தியில் “இசப்கல் ” உலகளவில் முதன்மை வகிப்பதோடு 30,000 எக்டர் பரப்பளவில் ஆண்டுதோறும் பயி[ரிடப்பட்டு 25,000 முதல் 30,000 டன்கள் இசப்கல் விதை மற்றும் அவற்றின் மேல் தோல் பகுதி ஏற்றுமதி செய்யப்பட்டு 10 கோடி ரூபாய் அந்நியச் செலவாணி ஈட்டித் தருகிறது.
மருத்துவப் பயன்கள் :
- இதன் விதைகள் மெல்லியதாகவும் இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும் விதைகளைச் சுற்றி உமி போன்ற மேல் தோல் பகுதி இருக்கும்.
- விதை மற்றும் உமி சிறந்த மலமிளக்கியாகப் பயன்படுகின்றன.
- குடலில் ஏற்படும் அடைப்பு, சிறு நீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள். மூல நோய், குடற்புண் மற்றும் மலச்சிக்கலைக் குணப்படுத்த உள் மற்றும் வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- பொதுப் பெயர் – அஸ்வகந்தா (Aளறயபயனோய)
தாவரவியல் பெயர் – வித்தானியாசோம்னி@பெரா(றுiவாயnயைளடிஅnகைநசய )
குடும்பம் – சோலனேசியே
மருத்துவப் பயன்கள் : - மருந்துப் பயிர்களில் சர்வரோக நிவாரணியாகக் கருதப்படுவது அஸ்வகந்தி ஆகும்.
- அஸ்வகந்தி வேரில் 0.13 முதல் 0.30 சதம் வரை மருந்து மூலப் பொருட்கள் அடங்கியுள்ளன. இவற்றில் விதானைன் (றுiவாயniநே) இசாம்னி@பெரின் (ளுடிஅnகைநசiநே) மற்றும் சாம்னி@பெரினின் (ளுடிஅnகைநசiniநே) ஆகிய அல்கலாய்டுகள் உள்ளன.
- இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவத்தில் பல வகையான உடல் உபாதைகளைப் போக்க பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- உடலில் நோய்களுக்கு எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தவும், வாதம், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண் போன்ற உபாதைகளைக் குணப்படுத்தவும் மற்றும் பாலுணர்வை அதிகரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் உடல் பலவீனம், கை, கால் சோர்வு மற்றும் வலிமையின்மை ஆகியவற்றைக் குணப்படுத்தி வயதாகின்ற தருணத்தில் உடலுக்கு பெரும் வலிமையையும், சக்தியையும் தருகிறது.
- பொதுப் பெயர் – கண்வலிக் கிழங்கு (அ) கலப்பைக் கிழங்கு (ழுடடிசல டுடைல)
தாவரவியல் பெயர் – குளோரியோசாசூப்பர்பா(ழுடடிசiடிளயளரிநசயெ )
குடும்பம் – லில்லியேசியே (டுடையைஉநயந)
மருத்துவப் பயன்கள் : - இதன் கிழங்கு மற்றும் விதைகளில் கோல்ச்சிசின் (ஊடிடஉhiஉiநே) மற்றும் சுப்பர்பின் (ளுரிநசbiநே) ஆகிய மூலப் பொருட்கள் உள்ளன.
- இவை பயிர் மேம்பாட்டு ஆராய்ச்சியில், சடுதி மாற்றத்திற்காகப் பயன்படுகின்றன. வாதம், மூட்டுவலி மற்றும் தொழுநோய் ஆகியவற்றைக் குணப்படுத்த உதவுகின்றன.
- குடற்புழுக்கள், வயிற்று உபாதை மற்றும் விஷக் கடிகளுக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன.
- விதைகளில் அதிக அளவு (0.2சதம்) “கோல்ச்சிசின்” மருந்து இருப்பதால் அதிகமான ஏற்றுமதி மதிப்பு பெற்றுள்ளது.
- மேலும் அண்மையில் விதைகளிலுள்ள “கோல்ச்சிசின்” மூலப் பொருளைக் காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான கோல்ச்சிகோஸைடு (ஊடிடஉhiஉடிளனைந) கண்டுபிடிக்கப்பட்டு. மூட்டுவலி மருத்துவத்தில் அதிகளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. இவை ஐரோப்பிய நாடுகளில் “கௌட்” (ழுடிரவ) எனும் மூட்டுவலி நிவாரணத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது.
- பொதுப் பெயர் – மருந்துக் கூர்க்கன் கிழங்கு (ஊடிடநரள)
தாவரவியல் பெயர் – கோலியஸ் @போர்ஸ் கோலின் (ஊடிடநரள கடிசளமடிhடii)
குடும்பம் – லேமியேசியே (டுibயைவநய)
மருத்துவப் பயன்கள் : - இதன் வேர்கள் கேரட்டைப் போல் இளமஞ்சள் நிறத்துடன் வாசனைத் தன்மையுடன் இருக்கும். இவற்றில் @போர்ஸ்கோலின் (குடிசளமடிhடin)எனும் மூலப் பொருள் உள்ளது.
- இது இரத்த அழுத்தநோயைக் குணப்படுத்தவும் மற்றும் கிளாகோமா (ழுடயரஉடிஅய) என்ற கண் கோளாறு நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
- அண்மைக் காலமாக, ஆண்களுக்கு ஏற்படும் வயிற்றுப் பருமன் (டீநௌவைல) அளவைக் குறைப்பதற்கான மருத்துவத்திலும் “@போர்ஸ்கோலின்”பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தகவல் : ப.அருள் அரசு, மு.பழனிக்குமார் மற்றும் சு.குமார். தோட்டக்கலைத் துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை
Spread the love