திண்டுக்கல், மார்ச் 11
மதுரை வேளாண்மை கல்லூரி நான்காம் ஆண்டு மாணவன் நாகராஜன் ஊரக வேளாண்மை அனுபவ திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக நத்தம் அருகே உள்ள ராஜகோபாலபுரத்தில் சங்கர லிங்கம் என்பவரது தோட்டத்தில்
நார்த்தங்காய் மரத்தில் மைட் பூச்சி காரணமாக சொரிகாய்கள் ஏற்படுவதை கண்டறிந்து, அதற்கு தீர்வாக அசபேட் என்னும் பூச்சிகொல்லியை 1 லிட் நீரில் 2 கி விகிதத்தில் கலந்து செயல்முறையை நிகழ்த்திக் காட்டினார்.
மேலும், அதே ஊரில் உள்ள ராமசாமி என்பவரது மா மரத்தில் பூசன நோய் தாக்குதலுக்கு ஸ்டார்ச் கரைசலை (1 கிலோ ஸ்டார்ச்/மைதாவை 5 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 20 லிட்டராகக் கரைக்கவும்) தெளித்து செயல்முறையை நிகழ்த்தினார். அதன் விளைவாக ஸ்டார்ச் காய்ந்து, பூஞ்சையுடன் நீக்கப்படும் செதில்களாக உருவாகும் என்றுரைத்தார். மேற்கண்ட செயல்முறைகள் வல்லுநர் திரு. பழனிக்குமார் மற்றும் பேராசிரியர் சந்திரமணி அவர்களின் அறிவுரைப்படி நிகழ்த்தியதாக குறிப்பிட்டார்.
Spread the love