October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நிசான் கிக்ஸ் காருக்கு ரூ.1 லட்சம் வரை சலுகை

மும்பை, அக்.13

நிசான் நிறுவனம் கிக்ஸ் எஸ்யுவி மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளது. நிசான் இந்தியா நிறுவனம் கிக்ஸ் எஸ்யுவி மாடலை வாங்குவோருக்கு ரூ.1 லட்சம் வரையிலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், ஆன்லைன் முன்பதிவு போனஸ் மற்றும் கார்ப்பரேட் சலுகை வடிவில் வழங்கப்படுகிறது. சிறப்பு சலுகை நிசான் கிக்ஸ் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். ஆன்லைன் முன்பதிவு போனஸ், கார் முன்பதிவை நிசான் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மேற்கொள்வோருக்கு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகையின் பலன்கள் விற்பனை மையங்கள் மற்றும் நகரங்களுக்கு ஏற்ப வேறுபடும். மேலும், இந்த சலுகைகள் அக்டோபர் 31ம் தேதிக்குள் காரை வாங்குவோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் எக்சேன்ஜ் சலுகை என்ஐசி சார்ந்த விற்பனை மையங்களில் மட்டுமே வழங்கப்படும். மாத தவணையில் கார் வாங்குவோருககு 7.99 சதம் வட்டி வசூலிக்கப்படுகிறது.

Spread the love