August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தங்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரிப்பு

புது தில்லி, மே 12

கோவிட் பெருந்தொற்றையும் மீறி, கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக கிராண்ட் தார்ன்டன் தெரிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: கடந்த ஏப்ரல் மாதத்தில் தனியார் ஈக்விட்டி முதலீடுகள், இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கான ஒப்பந்தங்களின் எண்ணிக்கை, 161 ஆக அதிகரித்துள்ளது.

இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும். இது குறித்து ஆலோசனை நிறுவனமான கிராண்ட் தார்ன்டன் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பரிவர்த்தனைகளின் மொத்தமதிப்பு, ரூ.94,900 கோடிக்கும் அதிகமாகும். உள்நாட்டில் மட்டும் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் சம்பந்தமாக நடைபெற்ற பரிவர்த்தனைகள் 30க்கும் அதிகமாகும். இதன் மதிப்பு, ரூ.36,500 கோடியாகும்.
கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஏப்ரல் மாத ஒப்பந்த பரிவர்த்தனைகள் 18 சதம் அதிகம். ஒப்பந்தங்களின் மதிப்பும், 174 சதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love