October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நிலக்கடலை, பாசி, தட்டைப் பயறு சாகுபடிக்கு மானியம்

தேனி, அக்.8

நிலக்கடலை, பாசிப்பயறு, தட்டைப்பயறு, சிறுதானியங்கள் போதியஅளவு இருப்பு உள்ளது. மானாவாரி காடுகளில் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் 50 சதவீத மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தேனி மாவட்டம், சின்னமனூர் வேளாண் உதவி இயக்குனர் பாண்டி அறிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மானாவாரி காடுகளில் உழவு முடித்து விவசாயிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்த சூழலில் சோளம், கம்பு, குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானியங்களையும் அல்லது தட்டைப்பயறு, பாசிப்பயறு, உளுந்து, கொள்ளு சாகுபடி செய்யலாம். சின்னமனுார் வேளாண் விரிவாக்க மையத்தில் நிலக்கடலை, பாசிப்பயறு, தட்டைப்பயறு, உளுந்து, கம்பு விதைகள் போதிய அளவு இருப்பு உள்ளது. சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் 50 சதவீத மானியத்தில் விதைகளை பெற்றுக் கொள்ளலாம் என வேளாண் உதவி இயக்குர் தெரிவித்தார்.

Spread the love