June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நிலாவாரை

நிலாவாரை, ஆவாரை போன்ற வெளிரிய மஞ்சள் நிறப் பூக்களையும் உடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி. இலையே மருத்துவப் பயனுடையவை. பித்த நீர் வியர்வை ஆகியவற்றை மிகுக்கும் மலமிளக்கியாகவும் பயன்படும் இலைக் கியாழத்தைத் தடவி வர சொறி சிரங்கு படை ஆறும். கூந்தல் உதிர்வது நிற்கும் இலையுடன் மருதோன்றி இலையை கூட்டி அரைத்து தடவ செம்பட்டை முடி கருக்கும். நிலாவாரை இலையைக் சோம்பு, சுக்கு, கொத்தமல்லி வகைக்கு 10 கிராம் ஒரு லிட்டர் நீரிலிட்டு 200 மில்லியாகக் காய்ச்சி கற்கண்டு கலந்து சாப்பிட பேதியாகும். நிலாவரை இலையை துவையலாக அரைத்து இரவில் பயன்படுத்த மலச்சிக்கல் தீரும்.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம், 94423 11505.

Spread the love