June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நீடித்த நிலைத்த பண்ணை மதிப்பீட்டில் மஞ்சள் சாகுபடி

மஞ்சள் சாகுபடியும், சந்தையும் நமக்குச் சாதகமாகவே இல்லை. இருப்பினும் தொடர்ந்து மஞ்சள் சாகுபடி செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சாகுபடி செலவை குறைத்து இயன்றவரை இயற்கை முறைகளைக் கடைப்பிடித்து உள்ளூர் இடுபொருட்களை முழுக்கப் பயன்படுத்தி நவீன கருவிகள் கொண்டு பண்ணைத் தொழிலாளர் பற்றாக்குறை தவிர்த்து நன்னெறி சாகுபடி முறைகளை கடைப்பிடிக்கவும்.

அறுவடை மற்றும் அறுவடைக்குப்பின் செய் நேர்த்திகளில் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திடவும். திட்டமிட்டு செயல்படுத்திட இடைத்தரகர் கமிசன் இன்றி, போக்குவரத்து செலவு மற்றும் கிடங்கு வாடகை, சாக்குப்பை செலவு கூட இல்லாமல் இத்திட்டத்தில் இணையும் விவசாயிகளிடமிருந்து, தரமான பாலீஸ் செய்யப்பட்ட மஞ்சள் கொள்முதல் செய்திட Farm Sustainability Assessment (‘FSA’) எனும் சான்று விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளில் இக்குழுவில் இணையும் மஞ்சள் விவசாயிகளுக்கு மட்டும் இலவசமாக ‘நீடித்த நிலைத்த பண்ணை மதிப்பீடு’ FSA – (Farm Sustainability Assessment) சான்று வழங்கப்படும். ஏற்கனவே இயற்கை வேளாண் சான்று (Organic Certification) விண்ணப்பித்து நடைமுறையில் உள்ளவர்களுக்கும் இச்சான்று வழங்கப்படும்.

இச்சான்றின் பலன் அடுத்த மூன்றாண்டுகளில் நம் விவசாயிகளுக்கு தெரிய வரும். வெளிநாட்டிலிருந்து மஞ்சள் வாங்க விரும்புபவர்கள் ‘FSA’ சான்றினை எதிர்நோக்குகிறார்கள். ‘FSA’ சான்றுக்கு, குழுவில் இணையும் விவசாயிகள் தங்கள் விருப்பம்போல கூடுதல் விலை கிட்டுமிடத்தில் விற்பனை செய்து கொள்ளலாம் அல்லது ‘ஏவிடிமெக்’ நிறுவனம் கோரும் பிரீமியம் (கூடுதல்) விலைக்கும் விற்கலாம்.

ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, மொடக்குறிச்சி, சென்னிமலை, ஈரோடு, கோபி, பவானி, சத்தி, டிஎன்பாளையம் பெருந்துறை மற்றும் தாளவாடி வட்டாரங்களில் ‘FSA’ குழு அமைக்கப்பட்டு வருகிறது. இதில் இணையும் விவசாயிகளுக்கு கட்டணமின்றி இலவசமாகச் சான்று வழங்கப்படுகிறது. மேலும், மஞ்சள் தர நிர்ணய ஆய்வு இலவசமாகச் செய்து சான்றளிக்கப்படுகிறது. ‘ஈரோடு விரலி’ எனப்படும் நமது பாரம்பரிய நாட்டு ரகத்திற்கு முன்னுரிமை கொடுத்து ‘AVTMe’ நிறுவனம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு பயிர்க்காலம் முழுவதும் தொடர் பயிற்சிகள், நீடித்த நிலைத்த சாகுபடி முறைகள், இடுபொருட்கள் குறித்த பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி, பண்ணை வாசலிலே கொள்முதல், இடைத்தரகர், கமிஷன், குடோன் வாடகை தவிர்க்கலாம், நல்ல சந்தை வாய்ப்பை உருவாக்குதல் – ‘FSA’ சான்று பெற்ற இரசாயனக் கலப்பற்ற மஞ்சளை ஏவிடிமெக் நிறுவனமே கூடுதல் பிரீமியம் கொடுத்து வாங்கிக் கொள்ள உறுதி அளித்துள்ளது.

இத்திட்டத்தில் இணைவதும் – சந்தைப்படுத்துதலும் விவசாயிகளின் விருப்பப்படியே இருக்கும். சிறு, குறு மஞ்சள் சாகுபடியாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், பாரம்பரிய மஞ்சள் ரகங்களை பாதுகாக்கவும், மஞ்சள் சார்ந்த பயிர் மேலாண்மையில் பல்லுயிர் பெருக்கம், குழந்தைத் தொழிலாளர் இல்லா நிலை, பண்ணை மகளிர்க்கு மஞ்சள் சார்ந்த துறையில் சிறு, குறு தொழில் முனைவோராக- ‘மஞ்சள் மகளிர் குழு” அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.
மேலும் விபரங்களுக்கு பின் வரும் GIZ-AVTMe ஆலோசகர்களை அணுகிடலாம்.
· இராம.சுப்பிரமணியன் – 98426 79500

· நூருல் அமீன் – 85478 85833

Spread the love