June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி

மதுரை, மே 25

மதுரை கிழக்கு வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 25.5.22 அன்று மீனாட்சிபுரம் கிராமத்தில் நீடித்;த நிலையான கரும்பு சாகுபடி குறித்த மாவட்ட விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு கு.சிவ.அமுதன், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) மதுரை, பயிற்சிக்கு தலைமையேற்று விவசாயிகளிடம் கரும்பு சாகுபடி முறைகளை பற்றி விளக்கினார். இரா.வளர்மதி, வேளாண்மை உதவி இயக்குநர், மதுரை மேற்கு, கலந்து கொண்டு விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடியில் களை மேலாண்மை குறித்து விளக்கினார். மதுரை விவசாயக்கல்லூரி ஆராய்ச்சி மாணவர் சதீஸ், கரும்பு கரணைகள் நடுவதின் முறைகள் பற்றியும், நீர் மேலாண்மை பற்றியும் விளக்கினார். வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் குபேந்திரன், தான் விவசாயம் செய்யும் கரும்பு சாகுபடி முறைகள் பற்றி விளக்கினார். இப்பயிற்சியில் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியானது 40 விவசாயிகளைக் கொண்டு நடைபெற்றது. இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்டப் பணியாளர்களான மூவேந்திரன் மற்றும் யுவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Spread the love