January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம்

புதுக்கோட்டை, டிச.24

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டாரம் வேளாண் உழவர் நலத்துறையின் கீழ் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் மூலம் – நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம் என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் மானாவாரி பகுதி விவசாயிகள் 40 பேர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பேசிய திருவரங்குள வட்டார வேளாண்மை அலுவலர் வீ.ரெங்கசாமி, தொகுப்பு மேம்பாட்டுக்குழு அமைப்பு, தொகுப்பு மேம்பாட்டுக்குழு பணிகள், வட்டார அளவிலான குழு அமைப்பு, அடிப்படை புள்ளி விபரங்கள் சேகரிப்பு, விவசாய குழுவின் பணிகள் மற்றும் பயிற்சியின் அவசியம் குறித்து விவசாயிகளிடம் எடுத்து கூறினார்.

மேலும் பயிற்சியில் கலந்து கொண்டு பேசிய வம்பன் வேளாண்மை நிலைய பேராசிரியர் நெல்சன் நவமணிராஜ், மானாவாரி சாகுபடி தொழில்நுட்பங்களான விவசாய பணிகள் மேற்கொள்வதற்கு, மானாவாரி நிலத்தை மேம்படுத்துவது அவசியம் எனவும், அவைகள் நிலத்தில் உள்ள தேவையற்ற செடிகளை, கொடிகளை அகற்றுதல், பண்ணை குட்டைகள் அமைத்தல், கசிவு நீர் குட்டைகள் அமைத்தல், மானாவாரி நிலத்திற்கு ஏற்றவாறு பயிர்களை சாகுபடி செய்தல், குறைந்த அளவே நீர் தேவைபடும் சிறுதானியங்களை சாகுபடி செய்தல்,வறட்சி தாங்கும் இரகங்கள் பயிர் செய்தல், விதை நேர்த்தி மற்றும் விதை கடினபடுத்துததல், சரியான பயிர் எண்ணிக்கையை பராமரித்தல், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், நுண்ணீர் பாசனம், இலைவழி உரம் தெளித்தல் மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான தொழில்நுட்பங்களை பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளிடம் எடுத்து கூறினார். பயிற்சியின் இறுதியில் மானாவாரி வோளண்மை தொடர்பான தொழில்நுட்ப கையேடுகள் வழங்கப்பட்டது.

இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் கு.நாகராஜன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அ.ஆரோக்கியராஜ், ர.ஸ்ரீநிதி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Spread the love