June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நீர் முள்ளி

நீர் முள்ளி குறுகலான ஈட்டி வடிவ இலைகளையும், நீல கருஞ்சிவப்பு நிற மலர்களையும், கணுக்கள் தோறும் நீண்ட கூர்மையான முட்கள் உடையது. நீர்வளம் உள்ள இடங்களில் தானாக வளரும் சிறு செடி. செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது. சிறுநீர்ப் பெருக்கியாகவும், தாதுக்கள் அழுகி விடுவதைத் தவிர்க்கும் மருந்தாகவும் செயற்படும். விதை காமம் பெருக்கும் நீர் முள்ளி சமூலத்தை சி இடித்து 200 கிராம் 2 லிட்டர் நீரில் போட்டு சோம்பு நெருஞ்சில் விதை வகைக்கு 50 கிராம் இடித்துப் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி அதாவது நீர்முள்ளி குடிநீர் வேலைக்கு 125 மில்லி அளவாக நாள்தோறும் 4 வேளை கொடுத்துவர ஊதிப் பெருத்த சரீரம் குறையும். வாத வீக்கம் கீல் வாதம் நரித்தலை வாதம் நீர் வழி அடைப்பு நீர் வழி புண் அழற்சி 3 நாளில் தீரும் 10 அல்லது 12 நாள் கொடுக்க மகோதரம் தீரும். வேர் மட்டும் 10 பங்கு கொதிநீரில் போட்டு 24 மணி நேரம் ஊற ஊற வைத்து தெளிந்த நீரை 2 மணிக்கு ஒரு முறை 30 மில்லி கொடுத்துவர நீர்க்கோவை தீரும். நீர்முள்ளி விதை 40 கிராம் நெருஞ்சில் விதை 20 கிராம் வெள்ளரி விதை 10 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக காய்ச்சி பனங்கற்கண்டு கலந்து ஒரு வாரம் காலை மாலை உட்கொள்ள சிறுநீர் கழியும் நீர் எரிச்சல் மேக நீர் வாத நீர் உடல் காங்கை நீங்கி சப்த தாதுக்களும் வலுவடைந்து உடல் பலமும் தாது பலம் உண்டாகும் விதையைப் பொடித்து வேளைக்கு அரை முதல் ஒரு கிராம் வரை பாலில் கலந்து சாப்பிட்டு வர மேகம் வயிற்றுப் போக்கு நீர் கோவை இரைப்பிருமல் ஆகியவை தீரும் குருதி தூய்மை அடைந்து விந்து ஊறும்

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை ஆதனூர் திருவண்ணாமலை மாவட்டம் 9442311505

Spread the love