August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நுகர்பொருட்கள் ஆன்லைன் விற்பனை ஒரே மாதத்தில் 33% உயர்வு : ஆய்வுத் தகவல்

சென்னை,

அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் ஆன்லைன் விற்பனை ஒரே மாதத்தில் 33 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கொரோனா 2வது அலை பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இ-காமர்ஸ் எனப்படும் மின்னணு வர்த்தகமுறையில் சுகாதாரம் சார்ந்த பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. யுனிகாமர்ஸ் எனும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

கொரோனா முதல் அலையைக் காட்டிலும் 2வது அலையில் ஆன்லைன் வர்த்தகம் குறைந்துள்ள போதிலும், மருத்துவம், வேளாண்மை தொடர்பான பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஃப்எம்சிஜி எனக்குறிப்பிடப்படும் அன்றாடப் பயன்பாட்டு நுகர்பொருட்கள் மற்றும் வேளாண் பொருட்களின் ஆன்லைன் விற்பனை 33 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், கொரோனா பரவல் காரணமாக மருத்துவம் மற்றும் மருந்துப் பொருட்களின் விற்பனை மட்டும் 18% உயர்ந்துள்ளதாகவும் யுனிகாமர்ஸ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் தேவை அதிகமில்லாத பொருட்களின் விற்பனை குறைந்துள்ளது. ஆன்லைனில் ஆடை, அணிகலன்கள் விற்பனை ஒரே மாதத்தில் 22% சரிவைச் சந்தித்துள்ளது. மார்ச் மாத விற்பனையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மூக்கு கண்ணாடிகள் விற்பனை 18% குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 11% அளவுக்கு ஆன்லைன் விற்பனை குறைந்துள்ளதாகவும் யுனிகாமர்ஸ் தெரிவித்துள்ளது.

Spread the love