சிவகங்கை, ஏப்.27
சிங்கம்புணரியில் கரோனா பரவல் காரணமாக நுங்கு விற்பனைக்கு வராததால், நுங்கு பிரியர்கள் அவற்றை தேடி அலைகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியத்தில் சமீபகாலமாக பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், கோடையில் விற்பனைக்கு வரும் நுங்கும் குறையத் தொடங்கியுள்ளது. இது தவிர கரோனா பரவல் காரணமாக நுங்குகளை வெட்டி விற்பனைக்கு கொண்டு செல்ல விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. சிலர் மட்டும் குறைந்த அளவில் நுங்குகளை வெட்டி விற்பனை செய்கின்றனர்.
Spread the love