நுணா எதிர் அடுக்கில் அமைந்த இலைகளையும், நாற்கோண சிறு இலைகளையும், சிறிய வெண்ணிற மலர்களையும், முடிச்சு முடிச்சு காய்களையும், கரு நிற பழங்களையும் உடைய மரம். மரத்தின் உட்புறம் மஞ்சள் வண்ணமாக இருக்கும். மஞ்சனத்தி என்றும் அழைப்பதுண்டு. தானாக வளரக்கூடிய மரம். துளிர், இலை, பழுப்பு, காய், பட்டை, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. நாடி, நடை, உடல் வெப்பம் இருக்கும். இலையை அரைத்து பற்று போட புண், சிரங்கு ஆகியவை ஆறும். இடுப்புவலி தீரும். நுணா இலைச்சாறு ஒரு பங்கும் உந்தாமணி நொச்சி பொடுதலை ஆகிய மூன்றின் சாறும் ஒரு பங்கு கலந்து மூன்று அல்லது நான்கு வேளை கொடுத்துவர சகல மாந்தமும் தீரும். நுணா இலை பழுப்பு சமன் சேர்த்து 35 கிராம் காட்டுச் சீரகத்துடன் ஒரு தேங்காய அளவு அரைத்து ஒரு லிட்டர் நல்லெண்ணையில் மெழுகு பதமுறக் காய்ச்சி எண்ணெயைப் பிரித்து பக்குவப் படுத்தி கல்கத்தை சுண்டை அளவு காலை, மாலை பாலுடன் கலந்து கொடுக்க வயிற்றுக் கோளாறு தீரும். என்னையை விண்ணகத்தில் தடவ தீரும். நுணா காயையும் உப்பையும் சமன் அரைத்து அடை தட்டி உலரவைத்து புடமிட்டு அரைத்து பற்பொடியாக பயன்படுத்த பற்கள் பலமடையும்.
நுணா

Spread the love