October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நுண்ணீர் பாசனத்தின் முக்கியத்துவம் பற்றி ஒரு நாள் பயிற்சி

கிருஷ்ணகிரி, அக்.9

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் தீர்த்தம் கிராமத்தில் நுண்ணீர் பாசனம் பற்றி விவசாயிகளுக்கு உள்மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிக்கு வேளாண்மை அலுவலர், உழவர் பயிற்சி நிலையம், கிருஷ்ணகிரி, சொட்டு நீர் பாசனம் 100% மானியத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கும், 75%% மானியத்தில் இதர விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது எனவும், சொட்டு நீர் பாசனம் பயன்படுத்துவதன் மூலம் 1 ஏக்கர் சாகுபடிக்கு தேவையான நீரை 3 ஏக்கர் வரை சாகுபடி செய்யலாம். மேலும், உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் அனைத்து செடிகளுக்கும் ஓரே சீராக கொடுக்கப் பயன்படுகிறது என விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். எலுமிசங்கிரி, வேளாண்மை அறிவியல் நிலையம், இஸ்மாயில், கலந்து கொண்டு சொட்டு நீர் பாசன முறையை பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் ஆகிய சிறு, குறு விவசாய சான்று, ஆதார் நகல், சிட்டா நகல், அடங்கல், நிலத்தின் வரைப்படம் நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் ஒரு புகைப்படம் கொண்டு உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் மூலமாகவோ அல்லது http://tnhorticulture.tn.gov.in/horti/mimis என்ற இணையதளத்தில் நேரடியாகவோ பதிவு செய்யலாம் என கூறி சொட்டு நீர் பாசனத்தை இணையதளத்தில் பதிவு செய்யும் முறைகள் பற்றி கூறினார். வேளாண்மை உதவி இயக்குநர், வேப்பனப்பள்ளி எம்.வானதி, இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், பயன்கள், இயற்கை உரங்களான பஞ்சகாவியா, இயற்கை பூச்சி விரட்டி, மண்புழு உரம் மற்றும் கனஜீவாமிருதம் தயாரிப்பு பயன்படுத்தும் விதம் மற்றும் விசைத் தெளிப்பான் பயன்படுத்தும் விதங்கள், வேளாண்மை மானியத்திட்டங்கள் பற்றி கூறினார். துணை வேளாண்மை அலுவலர், வேப்பனப்பள்ளி ராமநாதன், விதைப்பண்ணை செய்வதின் பயன்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள், உயிர் உரங்களின் பயன்கள் பற்றியும் விவசாயிகளுக்கு கூறினார். மேலும் சிவக்குமார், லேட்ரல் சொட்டு நீர் பாசனக் கம்பெனியின் உதவியாளர், சொட்டு நீர் பாசனக் கருவிகளை பராமரிக்கும் முறைகள் மற்றும் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் பற்றி செயல்விளக்கம் செய்து காண்பித்தார். உதவி வேளாண்மை அலுவலர்செல்வம், வேளாண்மைத் துறையின் மானியத் திடடங்கள் பற்றி கூறினார், மற்றும் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் பாரதிராஜா, அட்மா திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்கள் பற்றியும், மேலும் பயிற்சியல் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நன்றி கூறினார்.

Spread the love